அலுவலகப் பணியாளர்களின் சேவைகளையும், வேதனங்களையும் சீராக்குவது தொடர்பான திருத்தச் சட்டமூலமும் திருத்தப் பிரேரணையும், பிரசவ அறை திருத்தப் பிரேரணையும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரச சேவையில் கடமையாற்றும் தந்தைமாருக்கு குறைந்த பட்சம் இரு வார கால பேறுகால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன அரச சேவை சார் பெண் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தொழிலாளர்கள் தொடர்பில் வகுக்கப்படுகின்ற சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்பகளை மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் தேவை.
இன்று எமது நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு பக்கம் தொழில் வாய்ப்புகளற்ற நிலையில் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கின்ற நிலையில், சீனா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தொழில்களில் ஈடுபடுத்துகின்ற நிலைமையே உருவாகியிருக்கின்றது.
இருக்கின்ற வேலைவாய்ப்புகளுக்கேற்ற ஆளணிகள் இல்லை. வேலைவாய்ப்புகளற்று இருப்போருக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. மறுபக்கத்தில் பார்க்கின்றபோது, எமது பகுதிகளில் அரச தொழிற்துறைகள் அற்ற ஏனைய தனியார்த்துறைகள் சார்ந்து செயலில் இருக்கின்ற தொழிற்துறைகளில் எவ்விதமான தொழில் முறை சட்டங்களும் பின்பற்றப்படாத நிலையே பெரிதும் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்களுக்கு கூடுதலான வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தில் அக்கறை காட்ட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த மாகாணங்களில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ அரச சேவையில் பணியாற்றும் ஆண் ஒருவர் தனது மனைவியின் பேறு காலத்தின் போது பெறும் விடுமுறையை அதிகரிப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment