புரவலர் ஹாசிம் உமர் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் கொழும்பு கொள்ளுபிட்டி குயீன்ஸ் ஹோட்டலில் 09-06-2018ஆம்திகதி அன்று இஃப்தார் நிகழ்வொன்று நடைபெற்றது.
ஊடகவியலாளர்களுக்கும் நண்பர்களுக்குமான ஏற்பாடு செய்யப்பட்ட இவ்இஃப்தார் நிகழ்வின் போது போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றியவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கபட்டது.
அத்துடன், தியத்தாலைவ ரிஸ்னா எழுதிய நட்சத்திரம் எனும் நூல் அறிமுகமும். டாக்டர் ஜின்னா ஷரீப்புதீன் அவர்களின் பவள விழா நினைவு மலராக வெளிவந்த திசைகள் சஞ்சிகையும் இதில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
இவ்இஃப்தார் நிகழ்வில் ஏராளமான ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.











No comments:
Post a Comment