அப்பாடா பெனான்சுக்காரன் வாகனத்த பறிச்சிட்டுப்போறான், இனிமேல் பெனான்சு கட்டத்தேவயில்லை நிம்மதியாயிருக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

அப்பாடா பெனான்சுக்காரன் வாகனத்த பறிச்சிட்டுப்போறான், இனிமேல் பெனான்சு கட்டத்தேவயில்லை நிம்மதியாயிருக்கலாம்

சமூக அந்தஸ்து மட்டத்தை பேணுவதற்காக மற்றவரைப்போல தானும் ஒரு புதிய காரை வாங்க நினைக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாத சம்பளக்கார் ஒருவர் பினான்ஸ் கம்பனியின் ஆசை வார்த்தைக்கு மயங்கி ஒரு காரை பினான்ஸில் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.

ஒரு ௹. 25 இலட்சம் பெறுமதியான காரை வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். 4 வருடங்களில் கட்டி முடிவதாயின் அந்தக்காரின் பெறுமதி ௹. 40 இலட்சம் அதன் பெறுமதிக்கு அக்றிமண்ட் அடிக்கப்படும்.

"வா மச்சான் சின்னவொரு சைன் ஒன்று" என தனது நண்பர்கள் இருவரை கூப்பிடுவார் நமது கதாநாயகன் "ஒனக்கில்லாத சைனா மச்சான்" என மூவரும் குறித்த அக்றிமண்டில் சைன் வைப்பார்கள்.

காரை வாங்குபவன் "எப்படிடா மாதா மாதம் தவணைப்பணத்தை கட்டுவேன்" என்ற எண்ணம் அவனின் ப்ளட் பிரசர் பட்டனை ஒன் செய்ய,"அவசரத்திற்கு எங்கும் போவதற்கு காரைக்கேட்கலாம் " என நண்பர்கள் நினைக்க, பினாண்ஸ் கம்பனியின் கிளைமெனஜரோ "ஒரு ௹. 50 இலட்சம் பெறுமதியான பண மரத்தை நட்டியாச்சி இனி அறுவடை ஆரம்பம் "என்ற சந்தோசத்தில் குறித்த தினத்தில் கேக் வெட்டி கொண்டாடுவார்கள்.

சில மாதங்களில், மோட்டர் சைக்களில் தனது கணவன் வேலைக்குப்போய் வந்தபோது இருந்த குடும்ப சந்தோசம் கொஞ்சம் கொஞ்சம் குறைவதை எமது நாயகனின் மனைவி உணர்வாள். கணவன் தனது குடும்பத்துக்கு உழைத்ததுடன் ஏசியில் டையைக்கட்டிக்கொண்டு வாழும் இன்னுமொரு குடும்பத்திற்கு (ப்ணான்ஸ் கம்பனி)ம் சேர்த்து மாடாய் உழைப்பதைக்கண்டு கண்ணீர் விடுவாள்.

மாத சம்பள வேலையுடன் இரவில் கயர் வேலையும் செய்வதால் ஒழுங்கான தூக்கம் சாப்பாடின்றி நமது கதாநாயகர் நோயாளியாவார். தவணைப்பணம் கட்டுவது தாமதமாகும். இவ்வளவு காலமாக நண்பனாக பழகிய (நடித்த)பிணான்ஸ் மனேஜர் படிப்படியாக எதிரியாய் மாறுவார்.

கட்ட வேண்டிய ௹. 40 இலட்சங்கலிள் ௹. 25 இலட்சம் எமது கதாநாயகன் கம்பனிக்கு கஷ்டப்பட்டு கட்டியிருப்பார். தவனணக் கட்டணத்துடன் தாமதக்கட்டணத்தைக் கட்டும் படி வக்கீல் நோட்டிஸ் வரும். 

அதன் பின்னர் வாகனத்தை ஒப்படைக்கும்படி கம்பனி வேண்டும். வாகனத்தை கம்பனியிடன் ஒப்படைத்தால் பிரச்சினையெல்லாம் முடிந்து விடும் என ஆசை காட்டி வாகனத்தை கம்பனி கைப்பற்றி விற்றுவிடும்.

நமது நாயகனோ "அப்பாடா பெனான்சுக்காரன் வாகனத்த பறிச்சிட்டுப்போறான் இனிம பெனான்சு கட்டத்தேவயில்ல என நின்மதி பெருமூச்சி விடுவார்.

சில மாதங்களின் பின்னர் மீண்டும் வக்கீல் நோட்டிஸ் வரும் ௹ 7 இலட்சம் கட்டும்படி அதைக்கண்டு அதிர்ச்சியடையும் எங்கள் நோயாளி கம்பனி கிளை மனேஜருடன் தர்க்கத்திலீடுபடுவார்.

இவரின் ஆர்கியுமண்ட் "நான் ௹ 25 இலட்சம் கட்டிட்டேன் வாகனத்தை ஒரு ௹ .20 இலட்சத்துக்கு வித்திட்டிங்க ஆகவே உங்களுடைய ௹. 40 இலட்ச டாக்கட் முடிஞ்சிதானே" என்பார், "எது என்றாலும் ஹெட்ஒபிசுடன் பேசிக்கொள்ளுங்க" என்பார் கிளை மனேஜர்.

எமது கதாநாயகன் அதை கணக்கிலெடுக்காமல் இருந்துவிடுவார். சில மாதங்களில் இவருக்கும் இவரது நண்பர்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் 8க்கு வரும்படி நீதிமன்ற அழைப்பாணை வரும்.

எது வந்தாலும் பறவாயில்லை என ஒரு கொழும்பு லோயரைப்பிடித்து மன்றில் தோன்றுவார்கள். வழக்காடல் என்ற பேரில் காலத்தை கடத்துவதற்கு எல்லோரும் உடந்தையாக இருப்பார்கள்.

இன்னும் 2 வருடங்கள் காலம் கடந்த பின் "இவர் கட்டவேண்டிய தொகை ௹ 7 இலட்சமல்ல கடத்தப்பட்ட காலத்துக்கான வட்டி வழக்குச்செலவுடன் ௹ 10 இலட்சம் கட்டியேயாக வேண்டும்" என கம்பனி லோயர்மார் கூறுவார்கள்.

இவர் பிடித்த லோயர் "கம்பனி லோயருடன் பேசி ஒரே தடவையில் ௹. 10 இலட்சம் கட்டுவதாயின் ஒரு சிறிய தொகையை கழிக்கச் சொல்லலாம் என்பார். அவ்வளவுதான் அவரால் செய்யமுடியும்.

"இதை வழக்கு ஆரம்பிக்கு முன் சொல்லியிருந்தால் ஒனக்கு தந்தத்தையும் சேர்த்து ஒரு 5 இலட்சம் மிச்சப் படுத்திருக்கலாமடா முட்டாள் பயலே" என்று மனதுக்குள் திட்டியது பக்கத்திலிருந்த எனக்கு மாத்திரம் கேட்டதால் தான் இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

சட்டத்தரணி சறூக் -கொழும்பு
https://www.facebook.com/photo.php?fbid=1868291529900749&set=a.193480344048551.51469.100001597599627&type=3&theater
Rifaideen Siraji முகநூலிலிருந்து

No comments:

Post a Comment