இலங்கை பாராளுமன்ற கட்டடத்தொகுதி அமைந்துள்ள காணிக்கான உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணி உறுதிப்பத்திரத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நாளை மறுதினம் கையளிக்கவுள்ளதாக காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற கட்டடத் தொகுதி அமைந்துள்ள காணி உரிய முறையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான சான்றிதழையும் வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை காலம் பாராளுமன்ற கட்டடத் தொகுதி சப்பிரதாய பூர்வமான பெயரிலேயே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment