என் நோன்பில்
ரத்தம் பாய்ச்சியிருக்கிறாய்
ரஷான் நீ
காஷாவில் நீ ஷஹீதானாய்
ரத்தம் துவைந்த ஆடையோடு
அந்த சுவனதழைப்பை ஏற்றுக்கொள்கிறாய்
வானம் உனக்காக பூத்தூவி புன்னகைக்கிறதே
சரி நீ போய்
அங்குள்ள ஷுஹதாக்களிடம்
என் ஸலாத்தை சொல் ரஷான்
காஸாவின் கண்ணீர்க் கதைகளை
கண்டிப்பாக சொல்
வாக்களிக்கப்பட்ட காலம் வரை
ரத்தத்தை நாங்களும்
தாரை வார்ப்போமென சொல்
தீனியத் தெருவெங்கும்
ஷஹாதத்தை விதைப்போமென
ரஷானே நீ சொல்
இன்று
உன் மரணம் பார்த்து ரமழானே அழுகிறதே
எனவே அழாதே நீ
உனக்கென கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இரு
ஆயினும் சற்று நீ துயிந்லெழு
நோன்பு முடிந்ததும்தான்
வானவர்கள் வந்துன்னை அழைப்பர்
சில வினாக்களை தொடுப்பர்
மின்னல் வேகத்தில் பதிலளிப்பாய் நீ
ஈமானியம் பட்டுத்தெறிக்க
இஹ்ஷானியம் முகிழ்த்து வர
இல்லை இல்லை
கேள்வி கணக்கின்றியே
நீ சுவனம் புகவும் கூடும்
ரஷான்
உன் மரணம் பார்த்து
என் மனம் மல்லுக்கட்டு நிற்கிறதே
உனக்காக உலகமே இத்தா இருக்க
பிரார்த்தனை முரசங்கள் வானைப் பிழக்கிறதே
நீ ரஷான் மட்டுமல்ல
காஷாவும்தான் நீ
கண்டிப்ய் நீ கவனிக்கப்படுவாய்
றையானிய பாபுகளும்
திறந்தே கிடக்கின்றன உனக்காக
ஓட்டமாவடி நளீம்
No comments:
Post a Comment