ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் முறுகல் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் முறுகல்

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. 

வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது. 

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இதற்கமைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலளார் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். 

குறிப்பாக கொழும்பிலே அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் இங்கே கண்துடைப்பிற்காக இப் போராட்டத்தில் பங்குபற்றியிருக்கின்றார்கள். என்ற கருத்தை தெரிவித்திருந்தார். 

இதனை அவதானித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் செல்வராசா கஜேந்திரனுடன் முரண்பட ஆரம்பித்தனர். இரு தரப்பு ஆதரவாளர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதனால் அங்கு நிலைமைகள் மோசமடைந்து செல்வதை அவதானித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இரு தரப்பையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

யாழ். தீபன்

No comments:

Post a Comment