விளையாட்டுத்துறை அமைச்சர் ஐ.சி.சி தலைவருக்கு இடையில் விசேட சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

விளையாட்டுத்துறை அமைச்சர் ஐ.சி.சி தலைவருக்கு இடையில் விசேட சந்திப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது எதிர்நோக்கியுள்ள நிர்வாகச் சிக்கல் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையை தெளிவுபடுத்துவதற்காக டுபாய் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான குழுவினர் (06) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அவைத் தலைவர் ஷஷாங் மனோகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

டுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற இவ்விசேட சந்திப்பின்போது பேரவையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்சன், ஆளுநர் சபை அதிகாரிகளிடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் தலைமையிலான குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டை உள்ளுர் மற்றும் சர்வதேச மட்டத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்வது மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் ஐ.சி.சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து உரிய தினத்தில் தேர்தலை நடத்த முடியாது போனதால் அதன் அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலளார் கமல் பத்மசிறியின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகளினால் இலங்கை கிரிக்கெட்டுக்கோ, அதன் எதிர்கால முன்னேற்றத்துக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அனைத்து வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பூரண ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்வதாக ஐ.சி.சியின் தலைவர் ஷஷாங் மனோகர் இதன்போது குறிப்பிட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி கமல் பத்மசிறி, பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்துகொhண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment