நாவுல, பல்லேகம, களுகங்கை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
டிபர் வாகனமொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
மகவெல, ரதலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment