ஜம்இய்யா முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி அனைத்து மதங்களுடனும் இணைந்து செயற்படும் ஓர் அமைப்பு - அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

ஜம்இய்யா முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி அனைத்து மதங்களுடனும் இணைந்து செயற்படும் ஓர் அமைப்பு - அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, நாட்டின் நல்லிணக்கத்திற்காக இனம், மதம், மொழி பாராது சேவை­யாற்றி வரு­வ­துடன், முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி ஏனைய அனைத்து மதங்­க­ளு­டனும் இணைந்து செயற்­படும் ஓர் அமைப்பு என அதன் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி தெரி­வித்தார்.

அ.இ.ஜ.உ. சமூக சேவைக் குழு ஏற்­பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்­க­ளுக்­கான இப்தார் ஒன்று கூடல் நிகழ்வு, கொழும்பு - கொள்­ளுப்­பிட்டி, அல் மண்ட்ஸ் உண­வ­கத்தில், நேற்றுமுன்­தினம் இடம்­பெற்­றது. இதன்­போதே றிஸ்வி முப்தி மேற்கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கும்­போது குறிப்பிட்டதா­வது, அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் பின் வெற்­றிக்குக் காரணம் மீடியா. அவரை உசுப்­பி­விட்­டதும் மீடியாதான். மீடியா இல்­லா­விட்டால், அவர் இந்­த­ள­வுக்கு வெற்றி பெற்­றி­ருக்க மாட்டார். ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு அவ­ருக்கு நிறை­யவே கிடைத்­தி­ருந்­தது. இதி­லி­ருந்து ஊட­கங்கள் மற்றும் ஊடக­வி­ய­லா­ளர்­களின் பங்­க­ளிப்பு எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் என்பதைப் புரிந்­து­கொள்­கின்றோம்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் எப்­பொ­ழுதும் ஒரு விட­யத்தை சரி­யான முறையில் ஆராய்ந்து, அந்த செய்­தியை உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே, அவற்றை வெளி­யிட வேண்டும். இதுவே, ஒரு ஊட­க­வி­ய­லா­ள­ருக்குரிய சிறந்த பண்பும், ஏனை­யோ­ருக்கு சிறந்த முன்மாதிரியுமாகும்.

இன்­றைய நவீன உலகில் ஊட­கங்கள், பெரும் பங்­க­ளிப்­புக்­களை வழங்கிக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்­ப­தையும் எம்மால் மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது. ஆனால், முஸ்­லிம்­க­ளுக்­கென தனியானதொரு ஊடகம், மும்­மொ­ழி­களிலும் வெளி­யி­டப்­பட வேண்டும். 

இதன்­மூ­லமே, எம்­மத்­தியில் காணப்­படும் காழ்ப்­பு­ணர்வு, கசப்புணர்வு என்­ப­வற்றை அகற்­றிக்­கொள்ள முடி­யு­மா­வ­தோடு, சகல சமூ­கங்­க­ளுக்கு மத்­தி­யிலும் புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம் என்ப­வற்­றையும் மென்­மேலும் வலுப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். அத்துடன், பெரும்­பான்மைச் சமூ­கங்கள் மத்­தியில் முஸ்லிம் சமூகம் தொடர்பில், ஒரு நல்ல அபிப்­பி­ராயம் ஏற்­பட வழி வகுக்கும்.

நமது ஜம்இய்யா, இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் சேவை செய்­யக்­கூ­டிய ஓர் அமைப்பு என, பெரும்­பா­லானோர் எண்ணிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். உண்­மையில், இந்த அமைப்பு அவ்வாறல்ல. இந்­நாட்டில் வாழும் சகல இன மக்­க­ளுக்கும் சேவையாற்றும் ஒரு அமைப்பு என்­பதை, இவ்­வி­டத்தில் ஆணித்தரமாகக் கூறு­கின்றேன். 

குறிப்­பாக, எமது அமைப்பு முஸ்லிம்­க­ளுக்கு சேவை செய்­வதைப் போன்று, ஏனைய பிற மத சகோ­த­ரர்­க­ளுக்கும் நிறை­யவே பலதரப்பட்ட சேவை­களைச் செய்து வரு­கின்றது. இனி­மேலும் அச்சே­வைகள் தொடரும் என்­ப­தையும் உறு­தி­பட இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்­கின்றோம்.

நாட்டில் எத்­த­னையோ அனர்த்­தங்கள் ஏற்­பட்­டன. இந்த அத்­தனை அனர்த்­தங்­க­ளிலும் ஜம்இய்யா பங்கு கொண்டு இன, மத மொழி சார்­பின்றி உத­வி­களை வழங்­கி­யுள்­ளன. இதில் நாமும், எமது குழு உறுப்­பி­னர்­களும் கள­மி­றங்கி, முடி­யு­மா­ன­வரை ஒத்துழைப்புக்களை நல்­கி­யுள்ளோம்.

சிங்­கள மொழிப் பாட­சா­லை­களில் முஸ்லிம் மாண­வர்கள் கல்வி பயில்­கி­றார்கள். குறிப்­பாக, கொழும்புப் பிர­தேச பாடசாலைகளிலேயே இவ்­வா­றான நிலை­மை­களைக் கூடு­த­லான அளவில் காணலாம். நாம் இவ்­வா­றான பாட­சா­லை­க­ளிலும் எமது சமூக மாண­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி, ஏனைய சமூக மாணவர்களுக்கும் ஒன்றுபோல் உதவி ஒத்தாசைகளைப் புரிந்து வருகின்றோம் என்றார்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கு கொண்ட இவ் இப்தார் ஒன்று கூடல் நிகழ்வில், ஜம்இய்யாவின் உப செயலாளர் மெளலவி எஸ்.எம். தாஸிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரும் கருத்துக்களை முன் வைத்தனர்.

Vidivelli

No comments:

Post a Comment