பிரதேசங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால், உயிர் பன்மைத்துவத்திற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

பிரதேசங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால், உயிர் பன்மைத்துவத்திற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது

நகர்ப் பிரதேசங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால், உயிர் பன்மைத்துவத்திற்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் நகர்ப் பிரதேசங்களில் எண்ணாயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக அதிகாரசபையின் திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் உபாலி இந்திரரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால், மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து நீர் மூலங்களும் மாசடைந்துள்ளன.திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.

நகர திண்மக் கழிவு முகாமைத்துவம் பற்றி உள்ளுராட்சி மன்றங்களும் சமூகத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment