பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது வேறு நபர்களின் பெயர் பட்டியல் ஏதும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்பினரும் தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த சபாநாயகர் திறைசேரி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானதல்ல என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் 25 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய முதல் அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸார் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
போலிப் பிரசாரங்கள் மூலம் இடம்பெறும் அநீதிகளை கருத்தில் கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிட வேண்டாமென சபாநாயகர் சகல தரப்புக்களையும் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment