மூன்று மீனவர்களுடன் அறுகம்பையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகொன்று காணாமற் போயுள்ளது.
கடற்றொழில் திணைக்களத்தின் அறிவித்தலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகளுக்கு படகொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் குறித்த படகு காணாமற் போயுள்ளது.
28 வயதான சுமேத லக்மால் சஞ்சீவ, 28 வயதான மதுஷங்க பத்மசிறி மற்றும் 32 வயதான திலும் சத்துரங்க ஆகியோரே காணாமற் போயுள்ளனர்.
No comments:
Post a Comment