வௌிநாடுகளிலிருந்து இலங்கைக்கு நோய்கள் பரவுவதைத் தடுக்க புதிய நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

வௌிநாடுகளிலிருந்து இலங்கைக்கு நோய்கள் பரவுவதைத் தடுக்க புதிய நடவடிக்கை

தொழில்நிமித்தம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் உடல்நிலை தொடர்பில் மருத்துவ அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் இது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், வௌிநாட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நிறுவனங்கள், குறித்த வௌிநாட்டு பிரஜைகள் தொடர்பிலான மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.

இலங்கையில் நிர்மாண பணிகள் உள்ளிட்ட பல துறைகளில் வௌிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வௌிநாடுகளிலிருந்து வருகை தரும் வௌிநாட்டு பிரஜைகள் ஊடாக பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment