மன்னாரில் இடம் பெற்ற சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

மன்னாரில் இடம் பெற்ற சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை

தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போதும், தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 3.30 மணிவரை குறித்த நடமாடும் சேவை இடம் பெற்றது. குறித்த நடமாடும் சேவையின் போது பல்வேறு சேவைகளை மக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
பிறப்புச் சான்றிழினை சட்ட ரீதியாக மொழிபெயர்த்தல், பிறப்பு சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்துதல், பிறப்புச் சான்றிதழின் புதிய பிரதியை பெற்றுக்கொள்ளல், விவாகமாகாத தம்பதியினரை சட்ட பூர்வமாக விவாகம் செய்து வைத்தல், பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமான சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள ஆவணங்களை பெற்றுக்கொடுத்தல், அரச காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சிர் மனோ கணேசன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டதோடு, திணைக்கள தலைவர்கள், உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள், கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நடாடும் சேவை ஏற்பாட்டுக்குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம் பெற்ற போதும், சேவைகளை பெற்றுக்கொள்ள தூர இடங்களில் இருந்து வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மக்களுக்கு உரிய விளக்கம் வழங்கப்படாமையினால் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும், நீண்ட தாமதத்தின் பின்பே தமது தேவைகளை பூர்த்தி செய்ததாகவும் பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment