காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டம்

காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் அலுவலகங்களை பிரதேச மட்டத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் 8 அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட இருப்பதாக அந்த அலுவலகத்தின் தலைவருர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேபோன்ற அலுவலகத்தின் சந்திப்பு எதிர்வரும் 13ம் திகதி திருகோணமலையில் இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக, கருத்துத் தெரிவித்த தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், கடந்த 10 வருட காலமாக இந்த விடயம் தொடர்பில், நீதி நிலைநாட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினரிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

எதிர்வரும் 13ம் திகதி திருகோணமலையில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று இடம்பெற்றது
இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இவர்களின் போராட்டத்தை பார்வையிட்டவாறு மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

மக்களுடன் கலந்துரையாடிய காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் அவர்களை குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் தாங்கள் தமது கலந்துரையாடலை நிறைவு செய்து மீண்டும் தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் வந்து தங்களுடன் கலந்துரையாடுவதாக காணாமல் போனோர் அலுவலக தலைவர் தெரிவித்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்குள் காணமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் நிமல்க்கா பெர்னாண்டோ ஜெயதீபா புண்ணியமூர்த்தி கணபதிப்பிள்ளை வேந்தன் எஸ் லியனகே மிராக் ரகீம் மொகென்ரி பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு உறவுகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து காணமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட்ட மக்களை மீண்டும் சந்தித்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் நாங்கள் சுமார் பத்து வருடங்களாக வீதிகளில் போராடிவருகிறோம் பல்வேறு ஆணைக் குழுக்களுக்கள் முன் சாட்சியமளித்தோம் எல்லாமே எமக்கு கண்துடைப்பாகவே இடம்பெறுகிறது எனவே இந்த அலுவலகத்தையும் நாம் நம்ப தயாராக இல்லை என தெரிவித்தனர்.

அலுவலகம் தொடர்பான பூரண விளக்கங்களை காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் வழங்கியபோது மக்கள் அந்த அலுவலகம் மீது நம்பிக்கை அற்றவர்களாக அலுவலகத்தை தாம் நம்புவதாக இருப்பின் காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் 100 பேரையாவது வெளிக்கொண்டு வந்து எமக்கு காட்டுங்கள் அல்லது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெயர்ப்பட்டியலை வெளியிடுங்கள் அதன் பின்னர் உங்கள் அலுவலகத்தை நம்புகிறோம் என தெரிவித்தனர்.

மக்கள் கூறிய விடயங்களை கருத்திலெடுப்பதாக தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடி சென்றதை அடுத்து போராட்ட காரர்களும் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment