தலைமன்னாரில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

தலைமன்னாரில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை

தலைமன்னார் – ஊருமனை பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

நேற்று (08) காலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமற்போயுள்ள மீனவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினரும் இணைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீனவர்களின் 10 படகுகளும், கடற்படையினரின் படகொன்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

வடக்கு கடற்பிராந்தியத்தில் தற்போது தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் கூஞ்ஞ, எமல்ரன் கூஞ்ஞ எனும் இரண்டு சகோதரர்களே காணாமற்போயுள்ளனர்.

No comments:

Post a Comment