கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா நிதியுதவி

நாட்டில் கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கு 7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியினூடாக வடக்கின் மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனூடாக பெரும்பாலான குடும்பங்கள் தமது காணிகளில் மீளவும் குடியேற முடியும் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு அதிகளவிலான நிதியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளதுடன், 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 2 பில்லியன் ரூபாவை அவுஸ்திரேலியா வழஙகியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment