அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் அந்தோனி போர்டைன் தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் அந்தோனி போர்டைன் தற்கொலை

அமெரிக்காவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் அந்தோனி போர்டைன் (Anthony Bourdain) 61 வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிபர் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்தோனி போர்டைன் உலகம் முழுவதும் சென்று விதவிதமான உணவு வகைகளை சமைத்து பெயர் பெற்றவர். அவர் தயாரித்த உணவு வகைகள், பானங்கள் பெரும் பிரசித்தி பெற்றவை. சமையல் கலைக்காக அவர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சிகளில் பல சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். CNN தொலைக்காட்சியில் ‘Parts Unknown’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமையல் நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் சென்றார். பாரிஸ் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பில் ஈடுபட்டார். சொகுசு அறையில் தங்கியிருந்த அந்தோனி போர்டைன் விடிந்து நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து, ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் நண்பர்கள் அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக தொங்கிக்கொண்டு இருந்தார். பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தோனி போர்டைனின் மறைவு மிகவும் வேதனையளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலையும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதுபோலவே அண்மையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேட் ஸ்பேட், தனது 55 ஆவது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. கேட் ஸ்பேட்டுக்கு உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளன.

No comments:

Post a Comment