மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று (10) காலை திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சில நீர்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிரிஷாந்தன்

No comments:
Post a Comment