4 பிள்ளைகளின் தந்தை மலசலகூட குழியில் இருந்து சடலமாக கண்டெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

4 பிள்ளைகளின் தந்தை மலசலகூட குழியில் இருந்து சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தில் மலசலகூடம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (09) பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். 

பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச்சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான இராசதுரை துவேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிச் சென்று, நேற்று சனிக்கிழமை காலை வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் பெரிகல்லாறு கடலாட்சியம்மன் வீதியின் பின் பக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மலசலகூட குழியில் அவர் சடலமாக இருப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

அம்பாறை சரவணன்

No comments:

Post a Comment