கல்பிட்டி பகுதியில் உள்ள பிரதேச அபிவிருத்தி வங்கி கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (09) இரவு 7 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
விபத்தினால் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தீயினால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment