கந்தளாய் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கந்தளாய் உயர்மட்ட குழு தலைவருமான ஜெசீல் மௌலவி அவர்களின் வேண்டுதளுக்கமைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் MS தௌபீக் அவர்களினால் இன்று (09) கந்தளாய் பிரதேச செயலகத்திற்குற்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிரத்யேக செயலாளரும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினருமான சனூஸ் அவர்களின் பங்குபற்றளுடன் கந்தளாய் பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில் வைத்து இவ்உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் அதிபர் சாஹிதீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment