கிழக்கு மாகாண ஆளுநரின் இப்தார் நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

கிழக்கு மாகாண ஆளுநரின் இப்தார் நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு நேற்று (8) வெள்ளிக்கிழமை திருகோணமலையிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், தேசிய நல்லிணக்க கலந்துரையாடல்கள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment