மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வெல்லவாய, வெஹரயாய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment