நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற இளைஞன் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற இளைஞன் பலி

முள்ளியவளை மதவாள சிங்கன் குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி மாலை வேளை முள்ளியவளையினை சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் குளத்தில் குளிக்க சென்றுள்ளார்கள். 

இதன் போது குளத்தின் ஆழமான பகுதியில் இளைஞன் ஒருவன் மூழ்கியுள்ளான். 

குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஏனைய நண்பர்கள் ஈடுபட்ட போதும், அவர்களது தேடல் பயனளிக்காத நிலையில் முள்ளியவளை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளார்கள். 

இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலம் நேற்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் முள்ளியவளை 01 ஆம் வட்டாரம் பொன்னகரினை சேர்ந்த 21 வயதுடைய இந்திரன் தகீசன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ். டெனிஸ்குமார், சடலத்தை பார்வையிட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். 

இதனையடுத்து பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முல்லைத்தீவு வசீலன்

No comments:

Post a Comment