கடலில் குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

கடலில் குதித்து பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

சிலாபம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட குறித்த பெண் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று (05) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் யார் என்பதை அடையாளம் காணமுடியாது உள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

38 வயதான குறித்த பெண் ஏன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார் என்பது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment