யாழ்.வடமராட்சியில் மின் இணைப்புக்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிக் கேபிள்கள் நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

யாழ்.வடமராட்சியில் மின் இணைப்புக்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிக் கேபிள்கள் நீக்கம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், மின்சார இணைப்புக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி கேபிள்கள் இன்று அகற்றப்பட்டன. இலங்கை மின்சார சபையினரால் கேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன.

கேபிள் இணைப்புக்கள் அகற்றப்பட்டுள்ளதால், குறித்த பகுதியில் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகளிக்க முடியாத நிலையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் தொலைக்காட்சி கேபிளூடாக மின் கடத்தப்பட்டமையால் யாழ். மாவட்டத்தில் ஏழு உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன.

எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

No comments:

Post a Comment