தென் மாகாணத்தில் முகக் கவசங்களுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

தென் மாகாணத்தில் முகக் கவசங்களுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்

தென் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு பாடசாலை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் உள்ள ஒல்கொட் வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு வகுப்பறையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்களை தவிர்க்கும் நோக்கில் முகக் கவசம் அணிந்தவாறு பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் மாகாணத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக மரணங்கள் பல சம்பவித்துள்ளன. இதனால், பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment