புத்தளம் மாவட்டத்தில் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட பெருக்குவட்டான் சமீரகம சிறு நகர வீதிகள் மற்றும் கொத்தான்தீவு சிறு நகர வீதிகள் ஆகியவற்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) பொது மக்களின் பாவனைகு திறந்து வைத்தார்.
முன்னர் குன்றும் குழியுமாக இருந்த வீதியை காபட் வீதியாக அபிவிருத்தி செய்தமைக்கு பிரதேச மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நன்றி தெரிவித்தனர்.
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment