புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது

கரடியனாறு, எலிஸ்வேவ வன பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கரடியனாறு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்கள் கொஸ்லந்த, மெரவக மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர்கள் ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment