இலங்கைக்கும் கொரியாவுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளார புரிந்துணர்வு வலுப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக கொரிய அரசு பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஈ - பாலம் மற்றும் ஆடைத் தயாரிப்பு தொழிற்றுறைக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன. இருநாடுகளின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்களின் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.
தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் பல திட்டங்கள் மற்றும் வர்த்தக முதலீடுகள் விவசாயம் கடற்றொழில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பான புரிந்துணர்வு வேலைத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஹோமாகம தொழில்நுட்ப நகர திட்டம் கம்பஹாவில் தொழில்நுட்ப கல்லூரி அமைத்தல், மற்றும் கொரிய பொருளாதார அபிவிருத்தி புரிந்துணர்வு நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை வெளிநாட்டு அமைச்சு மட்டத்தில் நடைபெற்றுள்ள இரண்டாவது இருதரப்பு அரசியல் ஆலோசனை கூட்டமாகும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் கொரிய குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முதலாவது பிரதியமைச்சர் லீ Lim Sung-nam. உள்ளிட்டோர் தலைமையில் உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை கொழும்பில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

No comments:
Post a Comment