கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள யூத் ஸ்ட்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு 09.06.2018 சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வானது விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ. ஐ.எல். பதூர்தீன் அவர்களின் தலைமையில் மீராவோடை பொதுச் சந்தைக் கட்டிடத்தில் அமைந்துள்ள அமீர்அலி கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
யூத் ஸ்டார் விளையாட்டுக் கழகமானது வருடந்தோறும் இப்தார் நிகழ்வினை நடாத்தி வருவதுடன், விளையாட்டுடன் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் சமூகப் பணி சார்ந்த விடயங்களிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு தங்கள் கழகத்தின் தலைவரான ஐ.எல். பதுருதீன் அவர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வேட்பாளராக நிறுத்தி வெற்றியீட்டியமை இவ்விளையாட்டுக் கழகத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் ஒற்றுமைக்கு சான்றாகும்.
இவ்இப்தார் நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசத்திலுள்ள அரச உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் நிருவாகிகள், உலமாக்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






No comments:
Post a Comment