தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையில் உள்ள மாணவர்களுக்கும் விசேட கல்வி பிரிவுகளிலுள்ள மாணவர்களையும் உள்ளடக்கிய வகையில் பாடசாலை மாணவர்களுக்கு காலைவேளையில் பால்பக்கற் ஒன்றை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுளளது.
இந்த வேலைத்திட்டம் 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் மில்க்கோ தனியார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் பெறுமதியில் 30 ரூபா என்ற அடிப்படையில் 150 மில்லிலீற்றர் அளவிலான பால்ப்பக்கற்றுக்கள் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படுகின்றது. இவை பாடசாலை மாணவர்களுக்கிடையே வழங்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு பிரச்சனையை கருத்தில்கொண்டு போசாக்கு ரீதியில் மாணவர்களை மேம்படுத்தி போசாக்கு நிறைந்த மாணவர் சமூகம் ஒன்றை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இதற்கமைவாக பால்பக்கற்றொன்றின் உயர்ந்த சந்தை விலைக்கமைவாகவேனும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு இத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment