அண்மையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் கொள்கலன்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
அதன்படி அந்த டின் மீன் கொள்கலன்களையும் ஏற்றுமதி செய்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் நுகர்வுக்கு உகந்ததல்ல என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து டின் மீன்களையும் பரிசோதனை செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தற்போது வரை 60 கொள்கலன்கள் பரிசோதனை செய்யப்பட்டு இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இனிமேல் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து டின் மீன்களிலும் மாதிரிகளைப் பெற்று அதனைப் பரிசோதனை செய்வதுடன், சந்தையிலுள்ள டின் மீன்களையும் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
No comments:
Post a Comment