ஐக்கிய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

ஐக்கிய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம இன்று கைச்சாத்திட்டார். இது தொடர்பிலான நிகழ்வு பௌத்தசாசன அமைச்சில் இன்று இடம்பெற்றது.

அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள காட்டுத்தாவர வகைகள் மற்றும் விலங்கு வகைகளின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான சமவாயம் என்பது சர்வதேச சமவாயமொன்றாகும். இந்த சமவாயத்தில் இலங்கை ஒகஸ்ட் 2 ஆம் திகதி 1979 இல் அமுலாகும். இதில் 183 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.

இதில் அண்ணளவாக 3500 பேர் பங்குபற்றவுள்ளனர். இம்மாநாடு 2019ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியிலிருந்து இரு வாரங்களுக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் இடம்பெறவுள்ள மிகப்பெரிய நிகழ்வாக இது அமையும். மாநாட்டை நடத்துவதற்கு மேலதிகமாக தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் சிறிய நடுத்தர பெரிய அளவிலான தொழிற்த்துறைகள் தங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு, கல்வியல் பிரிவுகள், உள்ளுர் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன காப்பகத்துக்கான தமது பங்களிப்புகளை வெளிப்படுத்துவதற்கான நிகழ்வுகளை நடத்தல் மாநாட்டுக்கான தன்னார்வலர் தொண்டர்களாக இணைத்துக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு CITES சம்பந்தமான போட்டிகளில் பங்குகொள்ளுதல் உட்பட இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கவுள்ளன.

இது தொடர்பில் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவிக்கையில்,

தக்கவைக்க முடியாத வர்த்தகத்தில் இருந்து அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதே பலதரப்புகளும் இணைந்த இச்சமவாயத்தின் நோக்கமாகும்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கத்துவ நாடுகள் அனைத்து மாநாட்டுக்காக கூடி அச்சுறுத்தலை எதிர்நோக்கும் விலங்குகள் தாவரங்கள் பற்றிய முக்கியமான முடிவுகளை எடுக்கின்றன.

CITES சமவாயமானது அனுமதிகள் பட்டியல்ப்படுத்தப்பட்ட வகைகள் என்ற கட்டமைப்பில் இயங்குகின்றது. உதாரணமாக இலங்கை சிறுத்தை CITES சமவாயத்தின் பட்டியல் 1 இல் காணப்படுகின்றது. அதன் வர்த்தகம் அனுமதிக்கப்படாது.

CITES சமவாயத்துக்கான இலங்கையின் முகாமைத்துவ அதிகாரசபையாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் காணப்படுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment