நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனு இன்று அழைக்கப்பட்ட போது வழக்கை விசாரிப்பதற்கு திகதி நியமிக்குமாறு முறைப்பாட்டாளர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி செப்டம்பர் 04ம் திகதி வழக்கை விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சரத் விஜேசூரிய மற்றும் காமினி வியன்கொட ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment