மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவியிடம் ஊழல் தடுப்பு போலீசார் 3 மணி நேரம் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவியிடம் ஊழல் தடுப்பு போலீசார் 3 மணி நேரம் விசாரணை

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் ஊழல் தடுப்பு போலீசார் இன்று 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மலேசியாவில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு சூடு பிடிக்கத் தொடங்கியது. அவர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.

அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணக்கட்டுகள், நகைகள் வைத்து நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின. நஜிப் ரசாக்கிடம் ஊழல் தடுப்பு போலீசார் சமீபத்தில் இரண்டு நாட்கள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். கோலாலம்பூர் நகரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு தலைமையகத்தில் 3 அடுக்குகளாக நடைபெற்ற இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரோஸ்மாவின் வழக்கறிஞர் குமரேந்திரன், ரோஸ்மா அளித்த வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும், எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் வர தயாராக ரோஸ்மா இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment