நாட்டின் தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கேகாலை மாவட்டத்திலும் கடந்த 2018.05.26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டு காலவரையறையின்றி பிற்போடப்பட்ட அரசகரும மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை மீண்டும் 2018.06.09, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளது.
அதன்பிரகாரம் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நடைபெறும் தினங்களும், இடங்களும் பின்வருமாறு திருத்தம் செய்யப்படுகின்றன.
பரீட்சை அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேர்முகப் பரீட்சைக் குழும இலக்கமும், நேரமும் மாற்றம் செய்யப்படாது. புதிய அனுமதிப்பத்திரம் அனுப்பப்படமாட்டாது என்பதையும், முந்தைய பரீட்சை அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என்பதையும் தயவுடன் கருத்திற் கொள்ளவும்.
இதுதொடர்பாக அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளமான www.languagesdept.gov.lk பார்வையிடலாம். மேலதிக விபரங்களுக்கு : 0112 888932, 0112 889506, 0112 865428
No comments:
Post a Comment