குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டி மின்குமிழ்கள் - News View

About Us

Add+Banner

Tuesday, June 5, 2018

demo-image

குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு எல்.ஈ.டி மின்குமிழ்கள்

5a5eeba331ca351a61102a5fae6a37c4_L
மாதாந்தம் 90 அலகுகளை விட குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு ஐந்து எல்.ஈ.டி மின்குமிழ்களை வழங்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்திட்டம் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்திகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறான ஒரு கோடி மின்குமிழ்கள் மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. சந்தை விலையை விட ஐம்பது சதவீத கழிவில் இந்த மின்குமிழ் வழங்கப்படவுள்ளது.

வாடிக்கையாளர்களின் மின் கட்டணப் பட்டியலில் இதற்கான கட்டணம் இணைக்கப்படவிருக்கிறது. 300 மெகாவோட்ஸ் மின்சாரத்தை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்திகள் அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் 75 சதவீத மின்சாரப் பாவனையாளர்கள் 90 அலகுகளை விட குறைந்தளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறனர்.

இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *