வீதிகளில் ஏற்படும் வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு முறையான வீதி ஒழுங்குகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகள் வாகனங்களின் வேகத்தினை குறைக்குமாறும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து உப பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ சில்வா குறிப்பிடுகையில்,
கடந்த இரு மாதங்களில காலை மற்றும் மாலை வேளைகளில் மழையுடனான காலநிலை நிலவுவதனால் வீதி விபத்துக்கள் ஏனைய நாட்களை விட சற்று அதிகமாகவே பதிவாகின்றன. வீதி விபத்துக்களால் பிரதான வீதிகளில் வாகன நெரிசல்களையும் காணக்கூடியதாகவுள்ளது.
வீதி விபத்துக்களை மட்டுப்படுத்த வேண்டுமானால் வீதி ஒழுங்குகளை முறையாக பயன்படுத்தல் மற்றும் வாகனஙகளின் பிரயாண வேகத்தினை மட்டுப்படுத்துவது அவசியமாகும். வாகன சாரதிகள் வீதி ஒழுங்குகளை மீறும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான உரிய தண்டனைகள் போக்குவாரத்து பொலிஸ் பிரிவால் பெற்றுத் தரப்படும்.
மேலும், வீதி ஒழுங்குகளை அவதனிப்பதற்கென வழமைக்கு மாறான அளவில் போக்குவாரத்து பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக வாகன நெரிசலை வீதிகளில் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காகவே அவ்வாறான நேரங்களில் போக்குவாரத்து பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வாகன விபத்துக்கள் வெவ்வேறுசந்தர்ப்பங்களில் நிகழ்கின்றன. விபத்துக்கள் எதிர்பாறாமல் நிகழ்வதாகையால்தான் போக்குவரத்துகளுக்கென சில ஒழுங்குகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரதான பாதைகளில் மிதிவண்டிகள் மற்றும் விலங்குகளின் நடமாற்றம், பாதைசாரிகள் வீதி ஒழுங்குகளை முறையாக கடைப்பிடிக்காமை, வாகன சாரதிகளின் கவனயீனம் போன்றன விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன.
இவ்வாறான விடயங்களால் ஏற்படும் விபத்துக்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் வீதிகளில் பயணிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுதல் அவசிமாகும். முறையான வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்தல் அவசியமாக கொள்ளப்படுகின்றது.
Vidivelli

No comments:
Post a Comment