தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான கலாநிதி எஸ். எம். முஹம்மத் இஸ்மாயில் இன்று (08) நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் எம்.பியாக இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கியிருந்த தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற எம்.எச்.எம்.நவவி இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment