கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பாலம் அதனை அண்டிய பகுதிகளில் காணப்படும் மின் கம்பங்களில் மின் விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதனால், இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால், இரவு வேளைகளில் இப்பாதையினூடாகச் செல்வோர் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஓட்டமாவடி பாலத்தின் ஒரு பகுதியிலிருந்து ஹன்ஷா எரிபொருள் நிரப்பு நிலையம் வரையான குறித்த பகுதியே இவ்வாறு இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. குறித்த பகுதியில் பிரதான புகையிரத்தக்கடவையும் மட்டக்களப்பு-கொழும்பு வீதியுடன் இணையும் காவத்தமுனைக்கான பிரதான சந்தியும் ஆபத்தான வளைவும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது
இது தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச சபை கவனமெடுத்து பழுதடைந்து காணப்படும் மின் குமிழ்களை உடனடியாக மாற்ற வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே நேரம், குறித்த பகுதியில் காணப்படும் மின் கம்பங்கள் உயரம் கூடியது என்ற காரணத்தினால், இவ்வாறு கவனிப்பாரற்ற நிலை உருவாகக் காரணமாக இருக்கலாம்.
அதே நேரம், எமக்கு அடுத்துள்ள ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் உரிய இயந்திரங்களின் உதவியுடன் இவ்வாறான உயரமான மின் கம்பங்களில் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு, இருளடைந்த பிரதேசங்கள் ஒளிர வைக்கப்பட்டு வருகின்றமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது,
அவ்வாறான இயந்திரங்களைப் பயன்படுத்தி ஓட்டமாவடி பாலம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் காணப்படும் உயரமான மின் கம்பங்களில் மின் குமிழ்களைப் பொருத்தி இருளடைந்து காணப்படும் பிரதேசத்தை ஒளிர வைக்கத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தியாவட்டவான் ஐ.றிஸ்வான்




No comments:
Post a Comment