பெருநாளில் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடை-நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

பெருநாளில் இஸ்லாத்துக்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடை-நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித்

பெருநாளை முன்னியிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத்தடை விதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொது மைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகை தருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறு நாளும் ஆண்களை மாத்திரம் அனுமதிப்பதாகவும், மூன்றாம் நான்காம் நாட்களில் பெண்களை மாத்திரம் அனுமதிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தலைமையில் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும், பெருநாள் நிகழ்வுகளையொட்டி ஆற்றங்கரையோர வீதிகளில் வாகனப்போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கும். பொது மக்களது பாதுகாப்பிற்காக தேவையான ஆண், பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தொழுகை நேரங்களில் ஒலிபெருக்கி நிறுத்தப்படும். சிறுவர்கள் வருகை தருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளுமில்லை எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஜம்இய்யத்து உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படாததினால் உள்ளூராட்சி மன்றம் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியதைக் கருத்திற்கொண்டு இம்முறை கட்டுப்பாடுகளை கடுமையாக விதிக்க சபை முடிவு செய்துள்ளது.

உப தவிசாளர் எம்எல் ரெபுபாசம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம்எஸ். சுபைர் (மக்காவுக்குப்பயணம்), எம்எஸ். நழீம், ஏஎஸ்எம். றியாழ், ஆரிபா கமால் மௌலானா ஆகியோர் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை.

thehotline.lk இணையத்தளம்

No comments:

Post a Comment