மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டலின் நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அவசியமானதொன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
பார் வீதியிலிருந்து புகையிரத நிலையம் திரும்பும் சந்தியில் கோவிலுக்கு முன்பாக இருக்கும் முஸ்லிம் உணவகத்தில் ஒரு அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆலய திருவிழா காலத்தில் இறைச்சிக்கொத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்கு இவ்வாறு இறைச்சிக்கொத்து இல்லையென அதில் எழுதப்பட்டுள்ளது.
இப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இனமத பேதமின்றி பலரும் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.



No comments:
Post a Comment