வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர் மடக்கிப் பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (14) தென் இலங்கையிலிருந்து வவுனியாவிற்கு வந்த நால்வர் சொகுசு வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகரில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை 7.30 மணியளவில் வவுனியா நகரிப்பகுதியில் வைத்து குறித்த சொகுசு வாகனத்தை மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். இதன் போது வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
அவர்களை இரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த விசேட அதிரடிப்படையினர் நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே அவர்களை மடக்கிப்பிடித்துள்ளனர்.

இதன் போது குருணாகல், கம்பஹா போன்ற பகுதிகளை சேர்ந்த 31, 39, 42, 44, வயதுடைய நால்வரையும் அவர்கள் பயணித்த வாகனத்தினையும் கைப்பற்றி வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

வாகனத்த்தை பரிசோதனை செய்தபோது, வாகனத்திலிருந்து ஒரு ஸ்கேனர் இயந்திரத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment