வாழைச்சேனையில் “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” விழிப்புணர்வும், நடவடிக்கையும் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

வாழைச்சேனையில் “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” விழிப்புணர்வும், நடவடிக்கையும்

உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியும், நடவடிக்கையும் வியாழக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையும், வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து மீள்பாவனைக்குதவாதவற்றை தவிர்த்துக்கொள்வோம் என்ற எண்ணக்கருவிற்கிணங்க விழிப்புணர்வுப்பேரணி வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக ஆரம்பமாகி வாழைச்சேனை சந்தை வரை சென்றது.
மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முகீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.தட்சாயிணி, வாழைச்சேனைப் பிரதேச செயலக கரையோர பாதுகாப்புத்திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஏ.பைறூஸ், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை இந்துக்கல்லூரி சுற்றாடல் முன்னோரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, பேரணியாகச் சென்றவர்கள் வாழைச்சேனை வியாபார நிலையங்களுக்குச் சென்று கடைகளில் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமான விழிப்புணர்வு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மீள்பாவனைக்குதவாத பொலித்தீன் பாவனையினை வியாபாரிகள் மேற்கொண்டால், உடனடியாக அதனைத்தடை செய்து, எவ்வாறான பொலித்தீன்களை பயன்படுத்த வேண்டுமென்று கருத்துரை வழங்கப்பட்டது.

thehotline.lk

No comments:

Post a Comment