கருவேப்பங்கேணி விபுலானந்தாவில் போதைப்பொருள் விழிப்புணர்வுப்பேரணி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 9, 2018

கருவேப்பங்கேணி விபுலானந்தாவில் போதைப்பொருள் விழிப்புணர்வுப்பேரணி

கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்களூடாக பொது மக்களுக்கு போதைப்பொருளற்ற எதிர்கால ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் கருத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருளற்ற தேசத்தை உருவாக்கும் செயற்றிட்ட நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் விழிப்புணர்வுப்பேரணியொன்று கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மாணவர்களால் பாடசாலையின் அதிபர் சா.சந்திரகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.
புகை மனிதனுக்கு பகை – போதை உன்னைக்கொல்லும் புற்று நோய்- இளையோரே போதை வேண்டாம் – குடிக்கெதிராக ஒன்றுபடுவோம் என்னும் வாசகங்களடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இப்போதைப்பொருள் விழிப்புணர்வுப் பேரணியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமான இவ்விழிப்புணர்வு பேரணியானது, கருவேப்பங்கேணி பிரதான வீதிகளுடாகச் சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. இதன் போது, மாணவர்களால் பொது மக்களுக்கு போதைப்பொருளற்ற எதிர்கால ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் எனும் விழிப்புணர்வுத் துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் இப்பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

thehotline.lk

No comments:

Post a Comment