56 ஆவது வயதில் காலமானார் – ஜனரஞ்சக தொலைக்காட்சி அறிவிப்பாளர் – ஹேமநலின் கருணாரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

56 ஆவது வயதில் காலமானார் – ஜனரஞ்சக தொலைக்காட்சி அறிவிப்பாளர் – ஹேமநலின் கருணாரத்ன

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஜனரஞ்சக தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ஹேமநலின் கருணாரத்ன இன்று பகல் தனது 56 ஆவது வயதில் காலமானார்.

இலங்கையின் ஊடகத் துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட ஹேமநலின் கருணாரத்ன 1962 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வாத்துவ பகுதியில் பிறந்ததுடன் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

1983 ஆம் ஆண்டு பயிலுநர் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இணைந்த அவர் “நவயய் பஹ” நிகழ்ச்சி மூலம் பிரபல்யமடைந்தார்.

தொலைகாட்சி அறிவிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும், ஆய்வாளராகவும் சிறப்பான சேவையாற்றிய ஹேமநலின், சிறந்த ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார்.

பல்வேறு தனியார் ஊடக நிறுவனங்களின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ள அவர் தனியார் தொலைகாட்சி நிறுவனமொன்றின் உரிமையாளருமாவார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஊடகவியலாளர் ஹேமநலின் கருணாரத்ன சிங்களப் பாடல்களுக்கு ஔிவடிவம் கொடுப்பதிலும் ஆரம்பகர்த்தாவாக புகழ்பெற்றிருந்தார்.

No comments:

Post a Comment