மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்டவர்கள் தங்க வைக்கபட்ட தற்காலிக இடங்களில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியமையால் தோட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொகவந்தலாவ ரொப்கில் கீழ் பிரிவு தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 03 குடியிருப்பாளர்களை சேர்ந்த 15 பேரை தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த இடங்களில் இருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தியமைக்கு எதிராக தோட்ட மக்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
இன்று (01) வெள்ளிக்கிழமை காலை தொழிலுக்கு செல்லாது தோட்ட கொழுந்து மடுவத்திற்கு அருகாமையில் டயர்கைள எரித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி பொகவந்தலாவ ரொப்கில் கீழ்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாகவும், பாறைக்கல் சரிந்து விழுந்த அபாயம் காரணமாகவும் குறித்த தோட்ட லயன் குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த 15பேர் ரொப்கில் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் விடுதியிலும் தோட்ட உத்தியோகத்தரின் விடுதியிலும் தங்க வைக்கபட்டுள்ளனர்.
தற்பொழுது ஒரு வருடமும் 03 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற கூறுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு உரிய வீடுகளை அமைத்து தருமாறும் எங்கள் பிரச்சினை குறித்து மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சதீஸ்
No comments:
Post a Comment