தென்மேற்கு பருவமழை - கடல் கொந்தளிப்புடன் கடும் காற்று வீசும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 6, 2018

தென்மேற்கு பருவமழை - கடல் கொந்தளிப்புடன் கடும் காற்று வீசும்

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டை சுற்றிய கடற்பரப்பில் காற்றின் வேகம் எதிர்வரும் சில தினங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொணராகலை, குருணாகலை, புத்தளம், இரத்தினபுரி மற்றும் கேகாலை பிரதேசங்களுக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய பிரதேசங்களுக்கு மணிக்கு சுமார் 50 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

காங்கேசன்துறை மற்றும் பொத்துவில் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment